BREAKING NEWS   Piala Thomas: Malaysia 5 Hong Kong 0: Justin Hoh mn Chan Yin Chak 21-17, 19-21, 21-17 | Thomas Cup: Malaysia 5 Hong Kong 0: Justin Hoh beats Chan Yin Chak 21-17, 19-21, 21-17 | Thomas Cup: Malaysia 4 Hong Kong 0: Goh Sze Fei-Nur Izzuddin Rumsani bt Reginald Lee-Tang Chun Man 21-19, 21-18 | Piala Thomas: Malaysia 4 Hong Kong 0: Goh Sze Fei-Nur Izzuddin Rumsani mn Reginald Lee-Tang Chun Man 21-19, 21-18 | RMN helicopter crash: Govt is not suspending the service of Fennec and HOM helicopters- Khaled Nordin | 
 அரசியல்

கோலா குபு பாரு இடைத்தேர்தல் பெரிக்காத்தான் நேஷனலை பிரதிநிதித்து கைருல் அஸ்ஹாரி

கோலா குபு பாரு, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலை பிரதிநிதித்து போட்டியிடுவதற்கு, உலு சிலாங்கூர் தொகுதியின் இடைக்கால பெர்சத்து கட்சித் தலைவரான 54 வயதுடைய கைருல் அஸ்ஹாரி சாவுட் வேட்பாளாராகக் களமிறக்கப்படவுள்ளார்.

கோலா குபு பாருவில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் வியாழக்கிழமை இந்த அறிவிப்பைச் செய்தார்.

கோலா குபு பாருவில் பிறந்து வளர்ந்தவரான கைருலை வேட்பாளாராக களமிறக்குவதற்கு பெர்சத்துவின் உச்சமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஃபெல்டா சுஹேர்தோ இடைநிலைப் பள்ளியில் தமது ஐந்தாம் படிவம் வரையிலான கல்வியைக் கற்ற கைருல், பின்னர் டிப்ளோமா பட்டப்படிப்பை நிர்வாகத் துறையிலும், இளங்கலை பட்டப்படிப்பை வணிக நிர்வாகத் துறையிலும் முடித்தார்.

நம்பிக்கை கூட்டணியைப் பிரதிநிதிக்கும், வீடமைப்பு மற்றும் ஊரட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் அதிகாரியான பாங் சோக் தாவ்வை கைருல் எதிர்கொள்ளவிருக்கிறார்.

[ read more ]
12h 之前
 MORE NEWS
 பரிந்துரை