BREAKING NEWS   Agong ucap tahniah kepada TPM Singapura Lawrence Wong yang bakal dilantik PM Singapura yang baharu | His Majesty Sultan Ibrahim King of Malaysia congratulates Singapore DPM Lawrence Wong for being next Singapore PM | His Majesty Sultan Ibrahim King of Malaysia thanked outgoing Singapore PM Lee for being a close friend to Johor and Malaysia | Veteran singer Hail Amir dies at HKL today - Seniman president | Penyanyi Hail Amir meninggal dunia di HKL petang ini - Presiden Seniman | 
 பொது

கணவன் கொலை: முன்னாள் மனைவியும் அவரது சகோதரரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்

26/04/2024 06:18 PM

தாவாவ், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்தாண்டு செம்பனைத் தோட்டம் ஒன்றில் இ-ஹெய்லிங் ஓட்டுநரான நூர்மான் பகாராதுவை கொலை செய்ததாக நம்பப்படும் அவரின் முன்னாள் மனைவி இன்று தாவாவ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அப்பெண்ணுடன், அவரின் சகோதரர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

மஜிஸ்திரேட் டாயாங் அய்டாகு அமிரா அமினுடின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை புரிந்து கொண்டதாக, 34 வயதான நூரிமா ஜூலியும் அவரின் மாற்றான் தாய் சகோதரரான 30 வயதுடைய சடாம் கிராமும் தலையசைத்தனர்.

கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்தாண்டு ஜனவரி 13-ஆம் தேதி இரவு மணி 7.30-இல் இருந்து இரவு மணி 11.30-க்கு இடையில் 61 வயதுடைய நூர்மானை, ஜாலான் அபாஸ் பத்து 5, ஜாலான் அன்ஜுர் ஜுவாராவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கொலை செய்ததாக நூரிமா மற்றும் சடாம் மீதான குற்றம் பதிவாகியுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு பதிவாகியிருக்கும் நிலையில் அதேச் சட்டம் செக்‌ஷன் 34-உடன் வாசிக்கப்பட்டது.

அவ்விருவருக்கும் ஜாமின் வழங்கப்படாத வேளையில் இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஜூன் ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)