BREAKING NEWS   97 per cent voter turnout in early voting for KKB state by-election - EC | Peratusan keluar mengundi bagi undi awal PRK KKB rekod 97 peratus - SPR | KKB polls: Two early voting centres closed at 5 pm - EC | PRK KKB: Dua pusat pengundian awal ditutup pada 5 petang ini - SPR | Govt reviewing National Disaster Management Policy to improve country's resilience, preparedness, ability to manage disasters - DPM Ahmad Zahid | 
 அரசியல்

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ம.இ.கா.

24/04/2024 07:49 PM

கோல குபு பாரு, 24 ஏப்ரல் (பெர்னாமா) --  இந்தியர்களின் நலனுக்காக கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ம.இ.கா. களமிறங்கியுள்ளது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதன் மூலம், உலு சிலாங்கூர் குறிப்பாக சம்பந்தப்பட்ட அந்த சட்டமன்ற தொகுதியில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அக்கட்சி முன்னிலைப்படுத்த முடியும் என்று அதன் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

"ஆதரவு வழங்க மாட்டோம் என்று கூறி தற்போது பிரச்சாரம் செய்ய வந்துள்ளதை பார்த்து அதிகமானோர் என்னிடம் கேள்வி கேட்டனர்.

"பிரதமர் கேட்டுக் கொண்டால் பிரச்சாரத்தில் ம.இ.கா. உதவும் என்று கூறினேன். தற்போது அவர் கேட்டுக் கொண்டதால் வந்துள்ளேன்," என்று கூறினர்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான ம.இ.காவின் தேர்தல் நடவடிக்கை மையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டார்.

கடந்த மார்ச் 21 தேதி கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான 58 வயதுடைய லீ கீ ஹியோங் புற்றுநோயால் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)