BREAKING NEWS   PM Anwar suggests that every leader, including the PM & ministers, look after one village and address their issues | Cadangan setiap pemimpin jaga satu kampung akan dibawa ke Mesyuarat Jemaah Menteri, Rabu ini - PM Anwar | PM Anwar cadang setiap pemimpin termasuk Perdana Menteri dan barisan menteri jaga satu kampung, selesaikan isu dihadapi | 
 அரசியல்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள்; மக்கள் நலன் தொடர்பானது

25/04/2024 06:18 PM

புத்ராஜெயா, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள ஒதுக்கீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தேசிய வளர்ச்சி நிரல் இடம் பெறலாம் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் கோடிகாட்டியுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான அம்சங்களும் இடம் பெறலாம் என்று எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றம் 
PETRA-வின் அமைச்சருமான அவர் கூறுகிறார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற இரண்டாவது துணைப் பிரதமரின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்குவதில் ஒருமைப்பாட்டு அரசாங்கம் நேர்மையாக இருந்தால், புரிந்துணர்வு ஒப்பந்தம் தேவையில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலின் தலைவர் டான் ஸ்ரீ முகிடின் யாசின் கூறியது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அது குறித்து கருத்து தெரிவிக்க டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் மறுத்துவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)