உலகம்

ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம்; பலி எண்ணிக்கை 57ஆக அதிகரிப்பு

05/05/2024 07:58 PM

போர்டோ அலெக்ரே, 05 மே (பெர்னாமா) -- தென் பிரேசிலின், ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் மாண்டோர் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான இந்த வெள்ளத்தினால் 
76 பேர் காயம் அடைந்திருப்பதோடு 67 பேரை காணவில்லை என்று கூறப்பட்டுகிறது. 

இந்த பேரிடரால், சுமார்  70 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் 14 லட்சம் பேர் வசிக்கும் PORTO ALEGRE நகரத்தை, இந்த மோசமான வெள்ளம் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆயிக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றியும் உணவின்றியும் அவதியுறுகின்றனர். 

நகருக்கான இருவழிப் பேருந்துச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

அதோடு, PORTO ALEGRE  அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

1941 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான வெள்ளப் பாதிப்பை விட, தற்போது ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தின் பாதிப்பு கடுமையாக உள்ளதாக பிரேசிலின் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)