BREAKING NEWS   His Majesty Sultan Ibrahim King of Malaysia congratulates Singapore DPM Lawrence Wong for being next Singapore PM | His Majesty Sultan Ibrahim King of Malaysia thanked outgoing Singapore PM Lee for being a close friend to Johor and Malaysia | Yang di-Pertuan Agong Sultan Ibrahim congratulates Singapore DPM Lawrence Wong for being next Singapore PM | Yang di-Pertuan Agong Sultan Ibrahim thanked outgoing Singapore PM Lee for being a close friend to Johor and Malaysia | Veteran singer Hail Amir dies at HKL today - Seniman president | 
 பொது

ஹெலிகாப்டர்கள் விபத்து குறித்து சினமூட்டும் கருத்தை வெளியிட்டவருக்கு 23,000 ரிங்கிட் அபராதம்

26/04/2024 06:22 PM

தைப்பிங், 26 ஏப்ரல் (பெர்னாமா) --  லூமுட், அரச மலேசிய கடற்படை, தி.எல்.டி.எம் தளத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது தொடர்பில், சினமூட்டும் கருத்தை வெளியிட்டதற்காக, இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வியாபாரி ஒருவருக்கு தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றம் 23 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

தம் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்ட 35 வயதுடைய சைஃபுடின் ஷஃபிக்கிற்கு நீதிபதி நபிஷா இப்ராஹிம் அத்தண்டனையை விதித்தார்.

அபராதம் செலுத்தத் தவறினால், அவருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கவும் நபிஷா உத்தரவிட்டார்.

பிறரின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் 'Saifuddin Shafik @saishafik' என்ற X பதிவில் தெரிந்தே அந்த மோசமான கருத்தை வெளியிட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233(1)(a)(ii) மற்றும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க வகை செய்யும் செக்‌ஷன் 233(3)-இன் கீழ் சைஃபுடின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தமது செயலுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மலேசிய ராணுவப்படை மற்றும் பொது மக்களிடம் நீதிமன்றத்தில் வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)