BREAKING NEWS   Perak setuju bekal air kepada Pulau Pinang melalui Taman Perindustrian Hijau Bersepadu Kerian - PM Anwar | Perak has agreed to supply water to Penang through the Kerian Integrated Green Industrial Park - PM Anwar  | UBER CUP RESULTS | China emerged as Uber Cup 2024 champion, beating Indonesia 3-0 in the final | China muncul juara Piala Uber 2024, tewaskan Indonesia 3-0 pada aksi final | 
 உலகம்

செவ்வாய்க் கிரகம்போல ஆரஞ்சு நிறத்தில் மாறியது ஏதென்ஸ்

25/04/2024 07:09 PM

ஏதென்ஸ், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரம் திடீரென செவ்வாய்க் கிரகம்போல ஆரஞ்சு நிறத்தில் மாறியதால் அங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பீதியடைந்தனர்.

புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள SINTEGMA SQUARE, PARTHENON உட்பட பல இடங்கள் ஆரஞ்சு நிறமாக மாறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரலாகி உள்ளன.

ஏதென்ஸ் நாட்டில் இந்த ஆரஞ்சு நிற வானம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த நிற மாற்றத்துக்கு என்ன காரணம் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த காலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வழக்கம்.

இந்த மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் புழுதி மண் துகள்கள் கலந்ததால் மேகக் கூட்டங்கள் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகத்தில் மண் துகள்கள் அதிகளவில் இருப்பதன் காரணமாக மாசுபாடு அதிகரிப்பதுடன் சுகாதார பிரச்சனை ஏற்படலாம் என கிரீஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், கடந்த சில நாட்களாக வீசிய பலத்த காற்றினால் நாட்டின் தெற்கு பகுதியில் காட்டுத்தீ சம்பவமும் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், நாடு முழுவதும் மொத்தம் 25 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)