BREAKING NEWS   DPM Ahmad Zahid wants Felda to have palm oil effluents biogas power plants to generate Renewable Energy | Don't take Ulu Tiram police station attack incident lightly - Ahmad Zahid | Jangan ambil mudah insiden serangan balai polis Ulu Tiram - Ahmad Zahid | TPM Ahmad Zahid mahu Felda punyai loji janakuasa biogas (efluen sawit) bagi menjana Tenaga Boleh Diperbaharui | Government provides high-speed Internet package for schools under MOE beginning July 1 - Fahmi | 
 பொது

முந்தைய அரசாங்கத்தைக் காட்டிலும், மலேசியாவில் தற்போது ஊடகச் சுதந்திரக் குறியீடு சிறப்பாக உள்ளது

04/05/2024 06:32 PM

ஜார்ஜ்டவுன், 04 மே (பெர்னாமா) -- முந்தைய அரசாங்கத்தைக் காட்டிலும், மலேசியாவில் தற்போது ஊடகச் சுதந்திரக் குறியீடு சிறப்பாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

நேற்று, RSF எனப்படும் எல்லையற்ற ஊடகவியலாளர்களால் வெளியிடப்பட்ட 2024-ஆம் ஆண்டு உலக ஊடக சுதந்திரக் குறியீட்டு அறிக்கையில் மலேசியா 107-வது இடத்தில் இருந்தாலும், அந்த அடைவு நிலை மோசமான ஒன்றல்ல என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் எடுத்துரைத்தார்.

''என்னைப் பொருத்தவரை இது திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்றாலும், இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மோசமாக இல்லை. 2021-ஆம் ஆண்டு நாம் 119-வது இடத்தில் இருந்தோம். 2022-ஆம் ஆண்டு 113-வது இடத்தில் இருந்தோம். எனவே, தற்போதுள்ள அடைவு நிலை இதற்கு முன்னர் இருந்த ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் சிறப்பாகவே உள்ளது,'' என்று அவர் கூறினார்.

இன்று, பினாங்கு, சுங்கை நிபோங்கில் நடைபெற்று வரும் வட மண்டலத்திற்கான 2024 MADANI RAKYAT நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருந்த ஃபஹ்மி ஃபட்சில் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்தாண்டு 73-வது இடத்தில் இருந்த மலேசியா, இவ்வாண்டு 34 இடங்கள் சரிவுக் கண்டு அதாவது 52.07 மதிப்பெண்களுடன் 107-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதை ஃபஹ்மி குறிப்பிட்டார்.

ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான வியூகத்தை மேம்படுத்துவதில் இந்நாட்டில் போலிச் செய்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புவதைக் கையாள்வதற்கான கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தமது தரப்பும் RSF-உம் இணக்கம் கண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மற்றொரு நிலவரத்தில், இவ்வாண்டின் ஊடகச் சுதந்திரக் குறியீட்டில், மலேசிய பின் தள்ளப்பட்டிருக்கும் நிலைக்கு, தொடர்பு அமைச்சரே காரணம் என்று பெர்சத்து கட்சியின் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் ஃபஹ்மி பதிலளித்துள்ளார்.

மலேசியா மற்றும் இஸ்ரேலை ஒப்பிட்டு, அந்த குறியீட்டின் நிலை குறித்து தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டிருக்கக் கூடாது என்றும் அவர் சாடினார்.

முன்னதாக, பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின்போது, இருண்ட ஜனநாயகத்தை மலேசிய சந்தித்தது எனும் நிலையை, வான் சைபுல் சிந்தித்து அவ்வாறான கூற்றை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)