BREAKING NEWS   Super League: JDT 3-1 Negeri Sembilan FC | Liga Super: JDT 3-1 Negeri Sembilan FC | Ulu Tiram attack: Perak Govt to contribute RM5,000 to Constable Ahmad Azza Fahmi's family - MB | Serangan Ulu Tiram: Kerajaan Perak sumbang RM5,000 kepada keluarga Konstabel Ahmad Azza Fahmi - MB | DPM Ahmad Zahid wants Felda to have palm oil effluents biogas power plants to generate Renewable Energy | 
 பொது

ஈ.சி.ஆர்.எல் கட்டுமானப் பணிகள் 65 விழுக்காடு நிறைவு

04/05/2024 06:37 PM

கோல குபு பாரு, 04 மே (பெர்னாமா) -- கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களை இணைக்கும் E-C-R-L எனப்படும் கிழக்குக்கரை இரயில் பாதைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஏப்ரல் வரையில் 65 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.

கிளந்தான், திரெங்கானு மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்களை உட்படுத்தி, அந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''சிலாங்கூரில் இறுதிக் கட்ட கட்டுமானம். அங்கு பணிகளின் அடிப்படையில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. 26 விழுக்காடு மட்டுமே. ஏனெனில் சிலாங்கூரில் பல சவால்கள் உள்ளன. அதில் ஒன்று நிலங்களைக் கையகப்படுத்துதல். கிழக்குக் கடற்கரையில், கிளந்தான், திரெங்கானுவில் சுமுகமாக நடைபெற்றது. நிலம் கையகப்படுத்துதல் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் 65% ஐ எட்டியுள்ளன,'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, ECRL தண்டவாளத்தைப் பொருத்தும் பணிகள், ஒரு நாளைக்கு 1.5 கிலோமீட்டர் என்ற அளவில், தற்போது 100 கிலோமீட்டரைத் தாண்டியுள்ளதாக லோக் கூறினார்.

தண்டவாளத்தைப் பொருத்தும் காலகட்டத்தை விரைவுபடுத்தக்கூடிய உயர் தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)