BREAKING NEWS   Ulu Tiram attack: Perak Govt to contribute RM5,000 to Constable Ahmad Azza Fahmi's family - MB | Serangan Ulu Tiram: Kerajaan Perak sumbang RM5,000 kepada keluarga Konstabel Ahmad Azza Fahmi - MB | DPM Ahmad Zahid wants Felda to have palm oil effluents biogas power plants to generate Renewable Energy | Don't take Ulu Tiram police station attack incident lightly - Ahmad Zahid | Jangan ambil mudah insiden serangan balai polis Ulu Tiram - Ahmad Zahid | 
 பொது

எம்.எச்370 விமானத்தை தேடும் பணியை மறுதொடக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு அனுமதி வேண்டும்

04/05/2024 06:41 PM

கோல குபு பாரு, 04 மே (பெர்னாமா) -- கடல் எந்திரவியல் நிறுவனம், Ocean Infinity மூலம் எம்.எச்370 விமானத்தைத் தேடும் பணியை மறுதொடக்கம் செய்வதற்கான பரிந்துரை முதலில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற வேண்டும்.

அரசாங்கம் அந்த பரிந்துரை ஆவணத்தை ஆய்வு செய்து வருகிறது என்றும் மலேசிய அரசாங்கத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம், தேடல் பணிகள் தொடங்குவதற்கு முன் இறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்தோணி லோக் கூறினார்.

"இந்த செயல்முறை 3 மாதங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைத்தும் சிறப்பாக நடந்தால், நவம்பர் மாதம் தேடுதல் பணியைத் தொடங்க அவர்கள் தயாராக உள்ளனர். ஏனென்றால், தென்னிந்தியப் பெருங்கடலில் உள்ள சூழ்நிலையால் அதைச் செய்ய முடியாது. இப்போது வானிலை நன்றாக இல்லை. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான வானிலையே மிகவும் பொருத்தமானது," என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர், பத்தாங் காலியில் ஈ.சி.ஆர்.எல் வேலைவாய்ப்பு திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் லோக் அவ்வாறு தெரிவித்தார்.

எந்தவொரு கட்டணமும் அந்நிறுவனத்தின் தேடல் நடவடிக்கையைப் பொருத்தது என்றும் அவ்விமானம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே அச்சேவைக்கான கட்டணம் செலுத்தப்படும் என்று, அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக 2017-ஆம் ஆண்டும் தொடங்கி 2018-ஆம் ஆண்டு வரையில், Ocean Infinity இந்தியப் பெருங்கடலில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)