BREAKING NEWS   PM Anwar suggests that every leader, including the PM & ministers, look after one village and address their issues | Cadangan setiap pemimpin jaga satu kampung akan dibawa ke Mesyuarat Jemaah Menteri, Rabu ini - PM Anwar | PM Anwar cadang setiap pemimpin termasuk Perdana Menteri dan barisan menteri jaga satu kampung, selesaikan isu dihadapi | Perak setuju bekal air kepada Pulau Pinang melalui Taman Perindustrian Hijau Bersepadu Kerian - PM Anwar | Perak has agreed to supply water to Penang through the Kerian Integrated Green Industrial Park - PM Anwar  | 
 பொது

துன் அப்துல்லாவின் உடல் நிலை சீராக உள்ளது

25/04/2024 06:45 PM

கோலாலம்பூர், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- தேசிய இருதயக் கழகம், IJN-இல் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி தற்போது சீரான நிலையில் உள்ளார்.

வாராந்திர FISIOTERAPI சிகிச்சைக்காக நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்றபோது அவரது நுரையீரல், காற்று தேக்கத்தால் பாதிக்கப்படிருந்தது கண்டறியப்பட்டது.

அதனால், மருத்துவரின் மேற்பார்வையில் போதுமான அளவு ஓய்வெடுக்க துன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவரின் அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

துன் அப்துல்லா  நலம் பெறுவதற்காக பிரார்த்தனை செய்துகொண்ட அனைவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவ்வறிக்கையின் வாயிலாக நன்றி கூறினர். 

மேலும், தற்போது, பார்வையாளர்கள் யாரும் வந்து அவரைப் பார்க்க வேண்டாம் என்று IJN கேட்டுக் கொண்டது.

இதனிடையே, அவரின் மருமனாகிய கைரி ஜமாலுடினும் துன் அப்துல்லா, IJN-இல்  சேர்க்கப்பட்டு மருத்துவரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)