BREAKING NEWS   Piala Thomas: China 3 Malaysia 1: He Ji Ting-Ren Xiang Yu mn Goh Sze Fei-Nur Izzuddin Rumsani 18-21, 21-19, 21-12 | Thomas Cup: China 3 Malaysia 1: He Ji Ting-Ren Xiang Yu beat Goh Sze Fei-Nur Izzuddin Rumsani 18-21, 21-19, 21-12 | Thomas Cup: China 2 Malaysia 1: Li Shi Feng beats Leong Jun Hao 21-17, 21-10 | Piala Thomas: China 2 Malaysia 1: Li Shi Feng mn Leong Jun Hao 21-17, 21-10 | Thomas Cup: China 1 Malaysia 1: Liang Wei Keng-Wang Chang lost to Aaron Chia-Soh Wooi Yik 21-15, 12-21, 17-21 | 
 பொது

மீண்டும் நடைபெறுகிறது திருவிளங்கு சைவ திருமுறை மாநாடு

24/04/2024 08:18 PM

கோலாலம்பூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் மீண்டும் இவ்வாண்டு திருவிளங்கு சைவ திருமுறை மாநாடு நடைபெறவுள்ளது. 

ஏப்ரல் 26, 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் தேவாரப் போட்டி, சைவ சித்தாந்த சொற்பொழிவுகள், ஆன்மீக பேருரைகள், தேவாரப் பண்ணிசைகள் என பல அங்கங்கள் இடம்பெறவுள்ளதாக தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேவாரப் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. 

ஏழிலிருந்து 15 வயது மற்றும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவுகளில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும் நிலையில், வளரும் தலைமுறையினரின் மத்தியில் தேவாரப் பாடல்களைக் கொண்டு சேர்த்து, அவற்றை அவர்கள் கற்றுத் தேர்வதற்கான ஒரு முயற்சி என்றும் டான் ஶ்ரீ நடராஜா கூறினார். 

எனவே, இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 01121506190 என்ற எண்ணில் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் தங்களை பதிந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். 

இதனிடயே, ஆசி உரை, சமய உரை, சொற்பொழிவுகளை நிகழ்த்த நாட்டில் உள்ள இந்து சமயத் தலைவர்களும் பேச்சாளர்களும் இதில் கலந்து கொள்வர் என்றும் நடராஜா விவரித்தார்.  

கோலாலம்பூர், ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மூன்று நாள்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு நடராஜா அழைப்பு விடுத்தார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை