BREAKING NEWS   Perak setuju bekal air kepada Pulau Pinang melalui Taman Perindustrian Hijau Bersepadu Kerian - PM Anwar | Perak has agreed to supply water to Penang through the Kerian Integrated Green Industrial Park - PM Anwar  | UBER CUP RESULTS | China emerged as Uber Cup 2024 champion, beating Indonesia 3-0 in the final | China muncul juara Piala Uber 2024, tewaskan Indonesia 3-0 pada aksi final | 
 பொது

மனவளர்ச்சி குன்றிய ஆடவர் மீது சுடுநீரை ஊற்றிய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

23/04/2024 06:14 PM

பினாங்கு, 23 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த வாரத்தில், சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின் தூக்கியில் இருந்த மனவளர்ச்சி குன்றிய ஆடவர் மீது, சுடுநீரை ஊற்றி காயப்படுத்திய பெண்ணுக்கு பாலிக் பூலாவ் செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6,000 ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஏப்ரல் 19-ஆம் தேதி பாயான் லெபாசில் உள்ள ஐ-பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் 33 வயதான ஏ. சோலைராஜ்ஜிற்கு காயம் விளைவித்ததை 39 வயதான ஊ சோவ் கீ ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அஹ்சால் ஃபாரிஸ் அஹ்மட் கைருடின் அத்தண்டனையை வழங்கினார்.

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 326-இன் கீழ்,னூ சோவ் கீ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் சிறைத் தண்டனையை இன்று தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதோடு, அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர் 12 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது எந்தவொரு சினமூட்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளாத மனவளர்ச்சி குன்றிய சோலைராஜ்ஜிற்கு எதிரான Oo-வின் இச்செயல் கடுமையான, மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான குற்றமாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை அஹ்சால் ஃபாரிஸ் சுட்டிக் காட்டினார்.

நாட்டிலுள்ள பல்லின மக்களுக்கு மத்தியில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நிகழக்கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இத்தண்டனை அமைவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)