BREAKING NEWS   Saifuddin Nasution will meet US Treasury department’s top sanctions official Brian Nelson tomorrow to convey the country's official stance | Saifuddin Nasution akan bertemu pegawai tertinggi AS Brian Nelson esok, sampaikan pendirian rasmi negara | MMEA will receive four AW189 helicopters within the next two years - Saifuddin Nasution | Selangor government hopes MFL and JDT will seriously consider Selangor FC's request to postpone the Sumbangsih Cup matches - MB | APMM bakal terima empat helikopter AW189 dalam masa dua tahun - Saifuddin Nasution | 
 பொது

கட்டுப்பாடுகள் கல்விச் சுதந்திரத்திற்கு தடையில்லை

26/04/2024 06:27 PM

புத்ராஜெயா, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- யூதர்களுக்கு ஆதரவான வெளிநாட்டுப் பேச்சாளர்கள் மீதான கட்டுப்பாடு, அவர்கள் வெளியிடும் கூற்றுகள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

ஆதலால், அக்கட்டுப்பாடு கல்விச் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு எழுந்திருக்கக் கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடீர் கூறுகின்றார்.

''இது தொடர்பில், கருத்து கூறுபவர்கள் கல்வி சுதந்திரம் மற்றும் நாட்டின் நற்பெயர் மற்றும் சுதந்திரத்தின் சூழலை வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற உயர்கல்வி அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு டாக்டர் சம்ரி செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவரை அழைத்து சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பில், மலாயா பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று உள்நாட்டு பேராசிரியர் கருத்துரைத்திருப்பது தொடர்பில் அவர் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)