உலகம்

கல்வி கழகங்களில் பரவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்

27/04/2024 07:12 PM

வாஷிங்டன், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் வலுத்து வரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் அந்நாட்டில் உள்ள இதர கல்வி கழகங்களுக்கும் பரவியுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டிருக்கும் விவகாரத்தை தீர்ப்பதற்கு அமலாக்கத் தரப்பினரை அழைத்து வர வேண்டும் என்றும், குடியரசு கட்சின் மூத்த தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

ஹமாஸ்-க்கு எதிரான இஸ்ரேல் போரினால் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையால் கோபமடைந்த அமலாக்கத் தரப்பினருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான மோதலின் பிரதிபலிப்பே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகா ஆர்ப்பாட்டக்காரர்கள், வெள்ளிக்கிழமை Chicago பல்கலைக் கழக வளாகத்தில் ஒன்றுகூடி பேரணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க கல்லூரி வளாகங்களில், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக மாணவர்களின் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில்,  Columbia பல்கலைக் கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, Illinois, Evanston-னில் உள்ள Northwestern பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இடைநீக்கம், வெளியேற்றம் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் உட்பட ஒழுங்கு நடவடிக்கைகளை, மாணவர் குறியீட்டில் தற்காலிக ஆணையை இயற்றியிருப்பதாக பல்கலைக் கழகத் தரப்பு எச்சரித்தது.

இருப்பினும், மாணவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்றொரு நிலவரத்தில், Arizona, Tempe-iல் உள்ள Arizona மாநில பல்கலைக் கழகத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

அதில் ஈடுபட்டிருந்த சிலரை போலீசார் விலங்கிட்டு அழைத்துச் சென்றதாக, ABC15 Arizona செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)