உலகம்

இந்தியாவில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு; 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

26/04/2024 12:38 PM

இந்தியா, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் 7 ஏழு கட்டங்களாக நடத்தப்படுகின்றது.

அதில், முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்த வேளையில், இன்று இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

13 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

அந்தவகையில் கேரளாவின் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அசாமிலும் பீகாரிலும் தலா 5, சத்தீஸ்கரிலும் மேற்கு வங்காளத்திலும் தலா 3, மணிப்பூர், திரிபுரா, காஷ்மீரில் தலா ஒரு தொகுதியில் இத்தேர்தல் நடக்கிறது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கை 1588 கோடியாகும்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 16 லட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, தமிழகத்தின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 65.5 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)