பொது

FOREST CITY-இல் சூதாட்ட மையத்திற்கு உரிமமா - பிரதமர் மறுப்பு

25/04/2024 06:25 PM

புத்ராஜெயா, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜோகூர் பாரு, FOREST CITY-இல் சூதாட்ட மையத்தை நிறுவுவதற்கான உரிமத்தை அரசாங்கம் வழங்கியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்திருக்கிறார்.

பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர் அல்லது 48 ஆயிரம் கோடி மலேசிய ரிங்கிட் மதிப்பிலான திட்டத்திற்கு அது தொடர்புடைய செல்வந்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் சாடினார்.

"இல்லை. சூதாட்ட மையத்திற்கு உரிமம் தரப்பட்டதாகக் கூறப்படுவது பொய். அதில் உண்மையில்லை. இல்லவே இல்லை," என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் இவ்வாறு சுருக்கமாக பதிலளித்தார். 

மேலும், Berjaya Corp நிறுவனத்தின் தோற்றுநர் டான் ஶ்ரீ  வின்சென்ட் டான் மற்றும் கெந்திங் குழுமத்தின் இயக்குநர் லிம் கொக் தை ஆகியோரை கடந்த வாரத்தில் ஒரு மதிய உணவுக் கூட்டத்தில் சந்தித்து இவ்விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் பிரதமர் கூறினார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)