BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 பொது

AI செயலி மூலமாக புகைப்படங்களைத் தொகுத்து தவறாக பயன்படுத்துவோர் கண்காணிக்கப்படுவர்

25/04/2024 06:14 PM

புத்ராஜெயா, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்தி புகைப்படங்களைத் தொகுத்து அதை தவறாக பயன்படுத்தும் நபர்களை தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி கண்காணிக்கிறது.

கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இணையத்தில் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

இதற்கு முன்னர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட தரப்பினரும் மீண்டும் அதே குற்றச் செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சமூக ஊடக தரப்பிடம் பல முறை சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இணைய பயனர்களின் பாதுகாப்பு தொடர்பாக எம்சிஎம்சி சில நடவடிக்கைகளை கூடிய விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் ஃபஹ்மி  தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)