BREAKING NEWS   PM Anwar suggests that every leader, including the PM & ministers, look after one village and address their issues | Cadangan setiap pemimpin jaga satu kampung akan dibawa ke Mesyuarat Jemaah Menteri, Rabu ini - PM Anwar | PM Anwar cadang setiap pemimpin termasuk Perdana Menteri dan barisan menteri jaga satu kampung, selesaikan isu dihadapi | 
 பொது

கணக்கு மறுசீரமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது KWSP

25/04/2024 06:08 PM

கோலாலம்பூர், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- KWSP எனப்படும் ஊழியர் சேம நிதி வாரியம், அதன் கணக்கு மறுசீரமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு திட்டம் மே மாதம் 11-ஆம் தேதி தொடங்கி அமலுக்கு வருகிறது.

இதன் மூலம், எதிர்காலத் தேவைகள் குறித்து முடிவெடுப்பதில் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வேளையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நிதியுடன் ஓய்வு பெறுவதற்கும் இது வழிவகுக்கும் என்று KWSP தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மட் சுல்கர்னாய்ன் ஓன் தெரிவித்தார்.

55 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களின் அனைத்து EPF கணக்குகளும், Persaraan, Sejahtera, மற்றும் Fleksibel என மூன்று கணக்குகளாக மறுசீரமைக்கப்படவுள்ளன.

ஓய்வு பெறும் போது பயன்படுத்தக்கூடிய சேமிப்பை Persaraan கணக்கிலும் ஓய்வூ பெறும் போது வாழ்க்கை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சேமிப்பை Sejahtera கணக்கிலும், குறுகிய கால நிதி தேவைகளுக்கு Fleksibel எனும் புதிய கணக்கிலும் இனி சேமிப்பை மேற்கொள்ளலாம்.

மே 11-ஆம் தேதி தொடங்கி, Persaraan கணக்கில் 75 விழுக்காடும், Sejahtera கணக்கில் 15 விழுக்காடும், Fleksibel கணக்கில் 10 விழுக்காடும் என KWSP பங்களிப்பு ஒதுக்கப்படும்.

உறுப்பினர்களின் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்கவும், அவர்கள் பணி ஓய்வு பெற்றப் பிறகு வாழ்க்கைக்கு போதுமான சேமிப்பை கொண்டிருக்கவும் இந்த முயற்சி துணைபுரியும் என்று அஹ்மட்  குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)