BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 பொது

ஹெலிகாப்டர்கள் விபத்தில் பலியானோரின் 21 பிள்ளைகளுக்கு தலா 1,000 ரிங்கிட் பிடிபிடிஎன் உதவி

25/04/2024 05:55 PM

லூமுட், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- லுமூட்டில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்களின் 21 பிள்ளைகளுக்கு தலா ஆயிரம் ரிங்கிட், பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டத்தின் மூலமாக உயர்க்கல்வி அமைச்சு வழங்கும்.

மேலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் அவர்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்திற்கும் விலக்கு அளிக்கப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டிப்பதாக அவர் கூறினார். 

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடமிருந்தும் அதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முஹமட் ஷாரிசான் முஹமட் தெர்மிசியின் குடும்பத்தை புதன்கிழமை இரவு நேரில் சென்று சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

"இதுவரை, நாங்கள் சேகரித்த தரவுகள் படி,  பாதிக்கப்பட்டவர்களின் 21 பிள்ளைகள் இன்னும் பள்ளியில் பயில்கின்றனர். அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு  தேசிய கல்வி சேமிப்புத் திட்டம், SSPN-னின் கணக்குகள் இலவசமாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சரியான எண்ணிக்கையை நாங்கள் புதுப்பிப்போம்," என்றார் அவர்.

மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தில் பயிலும் 21 வயதான NURUL SHAHFIQAH MOHD SHAHRIZAN என்ற மாணவி மட்டுமே, தற்போது கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக டாக்டர் சம்ரி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)