BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 விளையாட்டு

23 வயதுக்குட்பட்ட 2024 கட்டார் ஆசியக் கிண்ணம்; மலேசியா விடைபெற்றது

24/04/2024 07:39 PM

டோஹா, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- 23 வயதுக்குட்பட்ட 2024 கட்டார் ஆசியக் கிண்ண காற்பந்து போட்டியின் பயணத்தை மலேசியா முடித்து கொண்டது.

இன்று அதிகாலை நடைபெற்ற D குழுவுக்கான ஆட்டத்தில், மலேசியா, குவைத் அணியுடன் 1-2 என்ற கோல்களில் தோல்வி கண்டது.

முன்னதாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்ட மலேசிய, இந்த தோல்வியின் வழி எந்த புள்ளியையும் பெறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே சொந்தமாக்கி கொண்டது.

முதல் பாதி ஆட்டத்தின் நிறைவில், மலேசியாவின் கோல் காவலர் ஷே இஷான் நஸ்ரேல் ஷேக் அஸ்மானுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் வழங்கப்பட்ட பினால்டி வழி, குவைத் முதல் கோலை அடித்து முன்னணி வகித்தது.

60-வது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட குவைத் இரண்டு கோலை அடித்து மலேசியாவுக்கு விடை கொடுத்தது.

இருப்பினும் மலேசியா தனது ஒரே ஆறுதல் கோலை அடித்தாலும், இப்போட்டிகான தனது பயணத்தை அது முடித்து கொண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502