உலகம்

பொதுமக்களைக் கத்தியால் குத்தி போலீசாரைத் தாக்கிய இளைஞர் சுட்டு வீழ்த்தப்பட்டார்

05/05/2024 07:51 PM

பெர்த், 05 மே (பெர்னாமா) -- ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பொதுமக்களில் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியதோடு, போலீசாரையும் தாக்கிய 16 வயது இளைஞனை அந்நாட்டு போலீஸ் சுட்டுக் கொன்றது.

அந்த இளைஞன் தனித்துச் செயல்பட்டதாகவும், அதற்கான காரணம் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். 

வில்லெட்டன் எனும் பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. 

அந்த கார் நிறுத்துமிடத்தில் ஓர் இளைஞன் கையில் கத்தியுடன் ஓடுவதாக சனிக்கிழமை இரவு பத்து மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீஸ் கூறியது.

பின்னர், அவர் வன்முறை தாக்குதலை மேற்கொள்வதாகவும் போலீசாருக்கு   இரண்டாவது அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

கத்தியைக் கீழே போடுமாறு அதிகாரிகள் கேட்டபோது, அந்த இளைஞன் எதிர்மாறாகச் செயல்பட்டது போலீஸ் காமிராவில் பதிவாகியுள்ளது.

பெரிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக தாங்கள் நடவடிக்கை எடுத்தாக போலீசார் கூறினர். 

போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான அந்த இளைஞன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)