BREAKING NEWS   Super League: Perak 2-3 PDRM | Liga Super: Perak 2-3 PDRM | Super League: Selangor 1-0 Kedah Darul Aman | Liga Super: Selangor 1-0 Kedah Darul Aman | 
 விளையாட்டு

ஊபர் கிண்ணம்: 16-வது முறையாக கைப்பற்றியது சீனா

05/05/2024 07:48 PM

செங்டு, 05 மே (பெர்னாமா) -- ஊபர் பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவை 3-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தி சீனா 16-வது முறையாக அதன் கிண்ணத்தை இன்று காலை கைப்பற்றியது. 

கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் நடந்த இறுதிப் போட்டியில், தென் கொரியாவிடம் வெற்றியை பறிக்கொடுத்த சீனா, இம்முறை சொந்த மண்ணில் விளையாடி சாதனைப் படைத்துள்ளது. 

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக சீனா, இறுதி ஆட்டத்தை தனது சொந்த அரங்கில் விளையாடியது. 

அதில், அந்நாட்டின் ஒலிம்பிக் வெற்றியாளரான சென் யுஃபேய் Chen Yufei  21-7, 21-16 என்று நேரடி செட்களில் இந்தோனேசியாவின் ஜோர்ஜியா மரிஸ்கா துஞ்ஞோங்கை Gregoria Mariska Tunjung வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நடந்த இரட்டையர் பிரிவில், உலகின் முதன் நிலை ஜோடியான 
செங் கிங் சேன் - ஜியா கிங் சேன் (Chen Qingchen -  Jia Yifan) 21-11, 21-8 எனும் நிலையில், Siti Fadia Silva Ramadhanti - Ribka Sugiarto இணையரைத் தோற்கடித்தனர். 

மற்றுமொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் எஸ்டர் நுருமி த்ரி (Ester Nurumi Tri) உடன் மோதிய (He Bingjiao)  ஹி பிங்ஜியாவோ 21-10, 21-15 மற்றும் 21-17 எனும் நிலையில் இரு செட்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். 

 

-- பெர்னாமா