BREAKING NEWS   Sebarang dakwaan yang mengatakan Reuters melaporkan Malaysia ialah negara pertama di Asia Tenggara yang akan disenaraikan oleh Amerika Syarikat sebagai penaja negara keganasan adalah palsu - Reuters | Reuters: Any claims that Reuters reported that Malaysia is the first country in Southeast Asia to be listed by the United States as a state sponsor of terror are false | Late Mutang Tagal has strong principles and values, serious in parliamentary reform efforts - PM Anwar | Mendiang Mutang Tagal miliki prinsip dan nilai kukuh, serius dalam usaha reformasi Parlimen - PM Anwar | KKB polls: 32.51 per cent voter turnout as at noon - EC | 
 விளையாட்டு

பேரிஸ்சுக்கு அனுப்பப்பட்ட ஒலிம்பிக் தீபம்

27/04/2024 07:48 PM

ஏதென்ஸ், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஏற்றப்பட்ட தீபம், அதன் ஏற்பாட்டாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

பாரம்பரியமாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, கிரேக்கம், ஏதென்ஸ்சில் நடைபெற்றது.

1896-ஆம் ஆண்டில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற Panathenaic அரங்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

19 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பிரான்ஸ் பாய்மரக் கப்பலில் வழி, இன்று  தெற்கு பிரான்ஸ்  துறைமுக நகரமான Marseille-க்கு இந்த தீபம் கொண்டு செல்லப்படும்.

12 நாள்கள் கடல் பயணத்திற்குப் பிறகு, ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் சென்றடையும் என்று நம்பப்படுகிறது.

1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டும் வரும் இந்த பண்டைய விளையாட்டுப் போட்டியின் தீபம், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தெற்கு கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது.

ஜூலை 26-ஆம் தேதி பேரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)