BREAKING NEWS   Viral claim on Malaysia being first ASEAN country sanctioned by US a hoax - Fahmi | Mesej tular dakwa Malaysia negara ASEAN pertama dikenakan sekatan oleh Amerika Syarikat adalah palsu - Fahmi | KKB Polls: 44.68 per cent voter turnout as at 2 pm - EC | PRK KKB: 44.68 peratus keluar mengundi setakat 2 petang - SPR | KKB polls: Polling centre at SJKC Bukit Fraser closed at 2pm | 
 விளையாட்டு

23 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம்; ஈராக் அரையிறுதி சுற்றுக்குத் தேர்வு

27/04/2024 07:38 PM

கட்டார், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- 23 வயதுக்குட்பட்ட 2024 கட்டார் ஆசியக் கிண்ண காற்பந்து போட்டி.

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று, ஈராக் அரையிறுதி சுற்றுக்குத் தேர்வாகியது.

10 விளையாட்டாளர்களுடன் விளையாடிய வியட்நாமுடன் ஈராக் களம் கண்டது.

முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவடைய, வெற்றி வாய்ப்பை தேடி இரு குழுக்களும் இரண்டாம் பாதியில் களமிறங்கின.

64-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை பயன்படுத்தி, ஈராக் தனது வெற்றியை உறுதிப் படுத்திக் கொண்டது.

ஆட்டத்தைச் சமப்படுத்த வியட்நாம் போராடிய வேளையில், தனது விளையாட்டாளர் ஒருவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் 10 பேருடன் விளையாட நேர்ந்தது.

அரையிறுதி ஆட்டத்தில், ஈராக் ஜப்பானுடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)