BREAKING NEWS   DSA ke-19 dan NATSEC Asia keempat akan diadakan pada 20-23 April 2026 - Mohamed Khaled | The 19th DSA and 4th NATSEC Asia to be held from April 20-23, 2026 - Mohamed Khaled | Bank Negara Malaysia keeps OPR unchanged at 3.0 per cent | BNM mengekalkan OPR pada kadar 3.0 peratus | Veteran singer Datuk A Halim dies in Johor today - Seniman president | 
 உலகம்

எரிபொருளை ஏற்றிச் சென்ற சரக்கு இரயில் தடம் புரண்டது

27/04/2024 07:27 PM

லப்டன், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- அரிசோனா - நியூ மெக்சிகோ மாநில எல்லை அருகே எரிபொருளை ஏற்றிச் சென்ற சரக்கு இரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ரயிலில் தீ பிடித்துக் கொண்டாலும் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தடம் புரண்ட இரயிலின் பாகங்களை அகற்றும் பணியில் ரயில் சேவை துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அதன் செய்தி தொடர்பாளர் லெனா கென்ட் தெரிவித்தார்.

இரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சாலைகளும் மூடப்பட்டன.

இதனால், லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் மாற்றுவழிகளை பயன்படுத்தியதாக நியூ மெக்சிகோ மாநில போலீஸ் மற்றும் அரிசோனா பொது பாதுகாப்பு துறை தெரிவித்தது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்ததாக நியூ மெக்சிகோ மாநில போலீஸ் LEFTENEN VARGAS தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)