BREAKING NEWS   Federal agencies told to work with Terengganu govt to eradicate poverty in the state within next two months - PM Anwar  | 1,663 families in Terengganu still in the hardcore poor group as of May 2 - PM Anwar  | Setakat 2 Mei, terdapat 1,663 keluarga masih berada dalam kelompok miskin tegar di Terengganu - PM Anwar  | Agensi Persekutuan diarah buat gerak kerja dengan kerajaan negeri menoktahkan kemiskinan di Terengganu dalam tempoh dua bulan akan datang - PM Anwar  | DSA ke-19 dan NATSEC Asia keempat akan diadakan pada 20-23 April 2026 - Mohamed Khaled | 
 பொது

சாலை விபத்தில் நால்வர் பலி; ஐவர் படுகாயம்

27/04/2024 07:00 PM

கோத்தா பாரு, 27 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று அதிகாலை கம்போங் பாஹிக்கு அருகிலுள்ள கோலா கிராய் - குவா மூசாங் சாலையில் இரண்டு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் உயிரிழந்த வேளையில் ஐவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

படுகாயத்திற்கு ஆளானவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவார்.

இச்சம்பவம் தொடர்பில் நள்ளிரவு 12.36 மணிக்கு தங்கள் தரப்புக்கு தகவல் கிடைத்ததும் 17 நிமிடங்களில் சம்பவ இடத்தை வந்தடைந்ததாக கோலா கிராய் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு பேச்சாளர் தெரிவித்தார்.

கோலா கிராய் தீயணைப்பு நிலையம் மற்றும் சுங்கை டுரியான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இச்சம்பவத்தில், Toyota Hilux ரக வாகனம் Ford Ranger ரக வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாகியது.

Toyota Hilux ரக வாகனத்தில் நான்கு ஆடவர்கள் பயணித்த வேளையில், அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும், இருவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

Ford Ranger ரக வாகனத்தில் இரண்டு ஆடவர்களும் இரண்டு பெண்ணும் பயணித்த வேளையில், அவர்களில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, எஞ்சிய மூவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோலா கிராய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)