BREAKING NEWS   Bank Negara Malaysia keeps OPR unchanged at 3.0 per cent | BNM mengekalkan OPR pada kadar 3.0 peratus | Veteran singer Datuk A Halim dies in Johor today - Seniman president | Penyanyi veteran Datuk A Halim meninggal dunia di Johor, hari ini - Presiden Seniman | Charity Shield match on Friday (May 10) cancelled following Selangor FC's withdrawal - MFL | 
 பொது

ENNEC & HOM வகை ஹெலிகாப்டர்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கத்திற்கு எண்ணமில்லை

27/04/2024 06:26 PM

கோலா திரெங்கானு, 27 ஏப்ரல் (பெர்னாமா) -- FENNEC மற்றும் HOM வகை ஹெலிகாப்டர்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் இதுவரை எண்ணம் கொண்டிருக்கவில்லை. 

பேராக், லூமுட்டில், அரச மலேசிய கடற்படை தளம், TLDM-இல் கடல்சார் நடவடிக்கை ஹெலிகாப்டர், HOM-AW139 மற்றும் FENNEC, M502-6 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவ்வகை ஹெலிகாப்டர்களின் பயன்பாடு குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின்அவ்வாறு கருத்துரைத்தார்.

டந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த HOM-AW139 மற்றும் Fennec M502-6 ஹெலிகாப்டர்களை உட்படுத்திய விபத்தைத் தொடர்ந்து அவற்றின் சேவையை ரத்து செய்வதற்கான அவசியம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், இன்று, திரெங்கானு, Manir, Kampung Dusun Tembakau-இல், Kasih Ihsan குடியிருப்புப் பகுதியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

அதேவேளையில், சம்பந்தப்பட்ட அவ்விரு ஹெலிகாப்டர்களின் கருப்புப் பெட்டி உட்பட அதன் பாகங்கள் கடந்த வியாழக்கிழமை சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் முஹமட் காலிட் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)