BREAKING NEWS   Federal agencies told to work with Terengganu govt to eradicate poverty in the state within next two months - PM Anwar  | 1,663 families in Terengganu still in the hardcore poor group as of May 2 - PM Anwar  | Setakat 2 Mei, terdapat 1,663 keluarga masih berada dalam kelompok miskin tegar di Terengganu - PM Anwar  | Agensi Persekutuan diarah buat gerak kerja dengan kerajaan negeri menoktahkan kemiskinan di Terengganu dalam tempoh dua bulan akan datang - PM Anwar  | 
 அரசியல்

தேர்தல் பிரச்சாரத்தில்  3R விவகாரங்களை எழுப்பாதீர்

27/04/2024 06:21 PM

கோலா பெர்லிஸ், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சார காலத்தின்போது, 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பான விவகாரங்களை எழுப்பாமல், சமூக ஊடகங்களில் கவனமுடன் செயல்படும்படி அனைத்துத் தரப்பினரும் நினைவூட்டப்படுகின்றனர்.

சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு பதிவையும் கண்டறிவதற்கான கண்காணிப்பை அதிகரிக்கும்படி தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்,எம்சிஎம்சி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் தொடர்பான சட்டங்களை மீறும் எந்தவொரு தரப்பினரையும் அழைப்பதற்கு எம்சிஎம்சி தயக்கம் காட்டாது என்றும் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இன்று, கோலா பெர்லிஸ், செபெராங் பெராய் ராமாய் கிராமத்தில் நடைபெற்ற Jiwa MADANI நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்விவகாரம் குறித்து கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)