BREAKING NEWS   Selangor FC umum tarik diri pada Piala Sumbangsih 2024, tidak kompromi isu keselamatan pasukan | Communications Ministry reviewing Digital Content Fund to develop local film industry so as to penetrate South East Asean market - Fahmi | Kementerian Komunikasi teliti semula Dana Kandungan Digital bagi bangunkan industri filem Malaysia untuk tembusi pasaran Asia Tenggara - Fahmi Fadzil | Gov't wants to focus on Southeast Asian film market before venturing further afield - Fahmi Fadzil | Telegram ready to work with gov't to curb digital piracy on its platform - Fahmi Fadzil | 
 பொது

கேகேபி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கலுக்கு 90% முன்னேற்பாட்டு வேலைகள் பூர்த்தி

26/04/2024 06:26 PM

சிலாங்கூர், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை நடைபெறவிருக்கும் வேட்புமனு தாக்கல் சீரான முறையில் இருப்பதற்கான 90 விழுக்காட்டு வேலைகள் நிறைவடைந்துள்ளன.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தற்போது இறுதிக்கட்ட பணிகளை செய்து வருவதோடு, நாளைய வேட்புமனு தாக்கல் செயல்முறைகளை மேற்கொள்ளவும் தயாராக உள்ளதாக தேர்தல் நிர்வாக அதிகாரி யுஹானாஸ் ஆரி கமாருடின் தெரிவித்தார்.

''நாங்கள் திட்டமிட்டிருக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்துள்ளோம். ஆள்பலத்திற்கு ஏற்றார்போல இம்முறை ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன. வேட்புமனு தாக்கல் தினத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும் கூடிய விரைவில் வாக்களிப்பு மையத்திற்கு தங்களைத் தயார்ப்படுத்தி கொள்வர். தற்போது ஒலி வாங்கி முறை மட்டுமே இன்றிரவு பரிசோதிக்கப்படும்,'' என்றார் அவர்.

அச்சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நாளை நடைபெறவிருக்கும் வேட்புமனு தாக்கலுக்கான முன்னேற்பாட்டு வேலைகளை அங்கு பார்வையிட்ட பின்னர் பெர்னாமா தொலைக்காட்சியிடம் யுஹானாஸ் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, நாளை வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் முக்கியமான ஆவணங்களைக் கொண்டு வருமாறு அவர் நினைவூட்டினார்.

அவ்வாறு செய்வதால், எவ்வித நிராகரிப்பும் இன்றி வேட்புமனு தாக்கல் சுமூகமாக நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில், வேட்பாளரின் ஆதரவாளர்கள் அவர்களுடன் அணிவகுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதோடு அதிகாரிகள் வழங்கிய விதிமுறைகளையும் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக யுஹானாஸ் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)