BREAKING NEWS   Malaysia komited bangunkan Malaysia MADANI, pastikan kestabilan menerusi pemupukan nilai dan perpaduan dalam kalangan masyarakat berbilang kaum - Ahmad Zahid Hamidi | Majlis Ulama Asia main peranan penting dalam memupuk kesederhanaan - Ahmad Zahid Hamidi | Malaysia committed to developing Malaysia MADANI, ensuring stability through values and unity among diverse societies - DPM Ahmad Zahid | Asian Ulama Council plays a crucial role in promoting moderation - DPM Ahmad Zahid | 
 விளையாட்டு

இ.பி.எல்: பிரைட்டனை வீழ்த்தியது மென். சிட்டி

26/04/2024 05:18 PM

லண்டன், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரியர் லீக் கிண்ண காற்பந்து போட்டி குறித்த செய்தி.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4-0 எனும் கோல்களில் பைரட்டன் அணியை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் வழி மென்செஸ்டர் சிட்டி 76 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

ஆர்செனல் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதாவது 77 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருக்கின்றது. 

இன்றைய ஆட்டத்தில், இரு கோல்களை பீல் ஃபூடன் அடித்த வேளையில், எஞ்சிய இரு கோல்களை ஜூலியன் அல்வாராஸ் மற்றும் கெவின் டெ புருன் ஆகியோர் போட்டனர். 

இந்த பருவம் முடிய சில ஆட்டங்களே எஞ்சி இருக்கும் நிலையில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் கணிக்க முடியாத சூழலில் உள்ளது.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)