பொது

திஎல்டிஎம் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த 10 பேரின் விபரங்கள்

23/04/2024 08:03 PM


கோலாலம்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- பேராக், லுமுட்டில் உள்ள அரச மலேசிய கடற்படை, திஎல்டிஎம் தளத்தில் இன்று காலை இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

TNL வாரண்ட் அதிகாரி II நோர்ஃபராஹிமி முஹமட் சைடி, TNL ஜூனியர் வாரண்ட் அதிகாரி நோர் ரஃபிசா அனுவார் மற்றும் முதல் தர சிப்பாய் JJM ஜோனா ஃபெலிசியா ரோஹ்னா ஆகியோர்,  HOM (M503-3) விமானத்தில் பயணித்த மூன்று பெண்கள் ஆவர் என்று டிஎல்டிஎம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் அந்த ஹெலிகாப்டரில் பயணிகளாக சென்றவர்கள் ஆவர்.

அவ்விபத்தில் பலியான 10 உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு:

HOM (M503-3) விமானம் - 4 பணியாளர்கள் மற்றும் 3 பயணிகள்:

(1) கமாண்டர் முஹமட் ஃபிர்டாவுஸ் ரம்லி டிஎல்டிஎம் - 503-வது படையின் கட்டளை அதிகாரி
(2) லெப்டினன்ட் கமாண்டர் வான் ரெசாவுடின் கமால் வான் ஜைனல் அபிடின் டிஎல்டிஎம்
(3) லெப்டினன்ட் கமாண்டர் முஹமட் அமிருல்ஃபரிஸ் முஹமட் மர்சுகி டிஎல்டிஎம்
(4) வாரண்ட் அதிகாரி II TLR (AQM) முஹமட் ஃபைசோல் தமாடுன்
(5) வாரண்ட் அதிகாரி II TNL நோர்ஃபராஹிமி முஹமட் சைடி (பயணி)
(6) TNL ஜூனியர் வாரண்ட் அதிகாரி நோர் ரஃபிசா அனுவார் (பயணி)
(7) முதல் தர சிப்பாய் JJM ஜோனா ஃபெலிசியா ரோஹ்னா (பயணி)

Fennec விமானம் (M502-6) - 3 பணியாளர்கள்:

(1)  தளபதி முஹமட் அமீர் முஹமட் டிஎல்டிஎம் - 502 படையின் கட்டளை அதிகாரி
(2) லெப்டினன்ட் சிவசுதன் தஞ்சப்பன் டிஎல்டிஎம்
(3) வாரண்ட் அதிகாரி II TMK முஹமட் ஷாரிசான் முஹமட் தெர்மிசி

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு திஎல்டிஎம் தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டது.

கடற்படை மரபுப்படி இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)