BREAKING NEWS   Decision of govt to raise civil servant salaries is in appreciation of groups such security forces including firemen - PM | Keputusan kerajaan naikkan gaji penjawat awam adalah bagi menghargai golongan terbabit terutama pasukan keselamatan termasuk anggota bomba - PM | 
 விளையாட்டு

எல்மினோ மார்டினேசுக்கு எதிராக இரு மஞ்சள் அட்டைகள்

20/04/2024 07:25 PM

லண்டன், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- யூரோப்பா லீக் காற்பந்து போட்டியின், ஒலிம்பியாகோஸ் அணிக்கு எதிரான முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்டன் வில்லா கோல் காவலர் எல்மினோ மார்டினேஸ் விளையாடமாட்டார்.

அர்ஜெண்டினாவின் கோல் காவலரான அவர், லில் அணிக்கு எதிரான இரு காலிறுதிப் போட்டியில், தொடர்ந்து இரு மஞ்சள் அட்டைகள் பெற்றதால், மார்டினேஸ் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் காலிறுதியின் இரண்டாம் பாதி ஆட்டத்தில், பெனால்டி வாய்ப்பின் போது மேற்கொண்ட தவற்றால், அவருக்கு  இரண்டாவது மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

ஐரோப்பிய காற்பந்து சம்மேளனத்தின் விதிகளின் படி, ஓர் ஆட்டத்தில் இரு மஞ்சள் அட்டை பெற்ற ஒருவர் தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாது.

உலக கிண்ண வெற்றியாளரான அவர், ஆஸ்டனின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் களமிறங்க முடியாமல் போனது.

மே 2 -ஆம் தேதி நடக்கும் மற்றுமொரு ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)