உலகம்

இஸ்ரேலில் தாக்குதல் எதிரொலி; வான்வெளியை மூடிய ஈரான்

19/04/2024 07:45 PM

தெஹ்ரான், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- இஸ்ரேலின் தாக்குதலால் தனது வான்வெளியை ஈரான் மூடியிருப்பதை தொடர்ந்து விமான பயணங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான நிறுவனங்கள் உடனடியாக ஈரான் நோக்கிய விமானப் பாதைகளை மாற்றுகின்றன.

மாற்று விமான நிலையங்கள் அல்லது புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக தெஹ்ரான், ஷிராஸ் மற்றும் இஸ்ஃபாஹன் வான்வெளியை ஈரான் மூடியுள்ளது.

இருப்பினும் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.45 மணிக்கு வான்வெளி பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிடப்படவில்லை.

ஈரானுக்கு செல்லும் தனது பயணங்களை Flydubai நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலுக்கு முன்னதாகவே பல மேற்கத்திய மற்றும் ஆசிய விமான நிறுவனங்கள் ஈரானையும் அதன் வான்வெளியையும் தவிர்த்து வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)