BREAKING NEWS   Thomas Cup: Japan 1 Malaysia 1: Takuro Hoki-Yugo Kobayashi beat Aaron Chia-Soh Wooi Yik 18-21, 21-14, 21-19 | Piala Thomas: Jepun 1 Malaysia 1: Takuro Hoki-Yugo Kobayashi mn Aaron Chia-Soh Wooi Yik 18-21, 21-14, 21-19 | Thomas Cup: Japan 0 Malaysia 1: Kenta Nishimoto lost to Lee Zii Jia 13-21, 3-21 | Piala Thomas: Jepun 0 Malaysia 1: Kenta Nishimoto kk Lee Zii Jia 13-21, 3-21 | PM Anwar confident Parliament will approve salary increase for civil servants | 
 பொது

இணைய மோசடி குற்றங்கள் தொடர்பாக 871 வழக்குகள் பதிவு

19/04/2024 06:21 PM

கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- நோன்பு பெருநாள் காலக்கட்டத்தில் கடந்த ஏப்ரல் முதலாம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, இணைய மோசடி குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 871 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு மூன்று கோடியே 72 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமாகும்.

2023-ஆம் ஆண்டு அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 1,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட வேளையில், இழப்பின் மதிப்பு ஐந்து கோடியே 67 லட்சம் ரிங்கிட்டாகும்.

பதிவு செய்யப்பட்ட 871 வழக்குகளில், தொலைத்தொடர்பு குற்றச் செயல்களை உட்படுத்தி 342 வழக்குகள் பதிவாகியிருப்பதாக புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.கே-இன் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமெட் யூசோப் தெரிவித்தார்.

இணைய மோசடி குறித்து பொதுமக்களிடம் அதிகரித்திருக்கும் விழிப்புணர்வு இக்குற்றச்செயல்கள் குறைவதற்கு வழி வகுத்திருப்பதாக அவர் கூறினர்.

இவ்வாண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை, இணைய மோசடி தொடர்பாக 8,913 குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன் மதிப்பு 83 கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஆகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)