BREAKING NEWS   PM Anwar confident Parliament will approve salary increase for civil servants | PM Anwar yakin Parlimen lulus keputusan kenaikan gaji penjawat awam. | ;pengumuman pelaburan tambahan US$2.2 bilion oleh Microsoft adalah yang terbesar pada satu-satu masa sejak gergasi teknologi itu bertapak selama 32 tahun di Malaysia -- PM Anwar | Microsoft's total investment amounting to US$2.2 billion is the largest investment at one time after the technology giant has been based in Malaysia for 32 years. -- PM Anwar | Phase Two construction of new terminal for Sultan Ismail Petra Airport to be implemented immediately - Nik Nazmi | 
 பொது

10 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது

19/04/2024 06:19 PM

பட்டர்வெர்த், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, சுமார் 10 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 30 கிலோகிராம் மெதாபெதாமைன் ரக போதைப் பொருளை பினாங்கு அரச மலேசிய சுங்கத்துறை கைப்பற்றியது.

கெலுகோர், புக்கிட் கம்பிர் பகுதியில் மேற்கொண்ட உளவு நடவடிக்கை மற்றும் பொது மக்கள் வழங்கிய தகவல்கள் அடிப்படையில் அந்த பறிமுதல் மேற்கொள்ளப்பட்டதாக மாநில இயக்குநர் ரொசெலன் ரம்லி தெரிவித்தார்.

இரவு 9.30 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், மரத்தின் அடியில் போதைப் பொருள் கொண்ட இரு பைகளை தமது தரப்பு கண்டெடுத்ததாக அவர் கூறினார்.

''சுமார் எட்டு மணி நேரம் அந்தப் பகுதியில் காத்திருந்தோம். ஆள் நடமாட்டம் இல்லை. சோதனை செய்த பிறகு அந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள மரத்தின் அடியில் இரு பைகளை கண்டெடுத்தோம்,'' என்றார் அவர்.

கூடுதல் பரிசோதனைக்காக அந்த இரு பைகளும் பினாங்கு போதைப்பொருள் தடுப்பு துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த பைகளில் மெதாபெதாமைன் அடங்கிய 30 பொட்டலங்கள் இருந்தது சோதனையின் முடிவில் தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை ஒரு லட்சத்து 50 ஆயிரம் போதைப் பித்தர்கள் பயன்படுத்தலாம்.

இச்சம்பவம் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39பி-யின் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)