BREAKING NEWS   The MADANI Gov't is continuously committed to solving the people's problems like hardcore poverty, infra development and basic facilities  - PM Anwar | Relationship between Federal Government and Kelantan getting closer, setting aside political differences to focus on people's problems - PM Anwar | Semua kementerian, agensi berkaitan diminta pastikan perancangan projek-projek di Kelantan dilaksana secara berkesan - PM Anwar | Unity Government never neglected in helping any state government - PM Anwar | Isu rakyat seperti kemiskinan tegar, pembangunan infra dan kemudahan asas adalah komitmen berterusan Kerajaan MADANI untuk diselesaikan - PM Anwar | 
 பொது

ஈரானில், இஸ்ரேல் தாக்குதல்; வெளியுறவு அமைச்சுடன் பிரதமர் சந்திப்பு

19/04/2024 06:07 PM

காஜாங், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று காலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அண்மைய நிலவரம் குறித்து விவாதிக்க அரசாங்கம் இன்று மாலை சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்துகிறது.

அந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானில் இருக்கும் மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில் சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், வெளியுறவு அமைச்சுடன் அந்த சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

இன்று, சிலாங்கூர், பண்டார் தெக்னோலோஜி காஜாங் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)